திருச்சி மத்திய சிறையில் அலுவலக மேலாளராக பணிபுரிந்து வந்தவர் திருமுருகன் (49). இவர், இன்று(30-06-2024) மதியம் மத்திய சிறை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, அவரை உறவினர்கள் மற்றும் சிறை காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே திருமுருகன் மரணம் அடைந்தார் . அவரது உடல், மத்திய சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
Comments are closed.