தஞ்சை மாவட்டம் பேராவூரணி பூக்கொல்லை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று மத்திய சிறையில் செல்வராஜ் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை சிறை காவலர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.