Rock Fort Times
Online News

விபச்சார தடுப்பு பிாிவு போலீஸ் 3 போ் ஆயுதப்படைக்கு திடீா் மாற்றம்…

கமிஷனா் சத்யபிாியா அதிரடி..

திருச்சி கண்டோன்மெண்ட் கலெக்டர் அலுவலக சாலை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து விபச்சார தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஸ்பாவின் மேலாளர் கைது செய்யப்பட்டதுடன், மூன்று பெண்களும் மீட்கப்பட்டு காப்பதகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஏற்கனவே அந்த ஸ்பாவின் மீது புகார் எழுந்த நிலையில், விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்திய பிரியா ஐபிஎஸ் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பால சரஸ்வதி, ராஜ்மோகன் மற்றும் ஓட்டுநர் அத்தாலி உள்ளிட்ட மூன்று பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்