ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைப்பது பாம்பன் பாலம் ஆகும். கடலின் நடுவே கட்டப்பட்டிருந்த பழைய பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததால், புதிய ரயில் பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பாம்பன் புதிய ரயில் பாலப்பணிகள் முடிவடைய உள்ளதால், வரும் அக்.1ம் தேதி முதல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்.,
பாம்பன் ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்து, செப்., கடைசி வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது. அதன் பின் அக்., 1ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கப்படும்.
புதிய ரயில் பாலத்தில் 10 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்படும். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.