திருச்சி சுப்பிரமணியபுரம் மெயின் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மகன் கோகுல் (வயது15) . இவர் நண்பர்களோடு காவிரி ஆறு தில்லைநாயகம் படித்துறை அருகே குளிக்க சென்றுள்ளார். அனைவரும் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருந்தபோதுஎதிர்பாராத விதமாக கோகுல் நீரில் மூழ்கினார்.அவருக்கு நீச்சல் தெரியாததால் நீந்தி கரை சேர முடியவில்லை.இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார்2 மணி நேரம் போராடி கோகுலை மீட்டனர்.ஆனால், அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.அவரது உடலை கோட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் மூழ்கி கோகுல் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Comments are closed.