Rock Fort Times
Online News

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து ரூ.1.31 கோடி மோசடி: பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பெருங்குடி வேலாயும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் முத்துக்குமார் (வயது 33).எம்எஸ்சி, பி.எட் பட்டதாரியான இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்நிலையில்
கடந்த ஆண்டு முத்துக்குமாருக்கு கௌரி சங்கர் என்கிற கௌதம் அறிமுகமானார். பின்னர் அவர் உஷாராணி என்பவரை டிஎன்பிஎஸ்சியில் வேலை பார்ப்பதாக கூறி முத்துக்குமாருக்கு அறிமுகம் செய்துள்ளார். மேலும், பணம் கொடுத்தால் டிஎன்பிஎஸ்சி மூலமாக அரசு வேலை வாங்கிவிடலாம் என தெரிவித்தார். அதோடு முத்துக்குமாருக்கு மேலும் 6 பேரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்களில் முத்துலட்சுமி என்பவர் ஐஏஎஸ் அதிகாரி போலவும், திருநாவுக்கரசு தலைமைச் செயலக அதிகாரி போலவும், மணிமாறன் உதவி கலெக்டர் போன்றும், இளையராஜா, ராஜ்குமார் ஆகியோர் நீர்வள ஆதாரத்துறையில் உதவி செயற்பொறியாளர்களாக பணியாற்றி வருவது போன்று டிப்டாப்பாக வந்துள்ளனர்.
இதை நம்பிய முத்துக்குமார் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 10 பேரிடம் ரூ.1 கோடியே31 லட்சத்து 685 வசூல் செய்து கௌரிசங்கர், உஷாராணி, ராஜ்குமார், இளையராஜா, முத்துலட்சுமி, திருநாவுக்கரசு, ராஜேந்திரன், மணிமாறன் ஆகிய 8 பேரிடம் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து பல்வேறு தவணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட கௌரிசங்கர் தரப்பினர், சிலருக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். ஆனால், அந்த ஆணைகள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இந்த மோசடி 2023 பிப்ரவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளது. பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் கௌரிசங்கர் தரப்பினரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முத்துக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் கௌரி சங்கர் உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்