திருச்சி மாநகர் மாவட்ட பாஜக செயலாளராக பதவி வகித்து வந்தவர் பொன். தண்டபாணி (வயது 60). கே.கே நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், விமான நிலைய பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். வழக்கம்போல, இன்று (07-03-2024) கட்டிட பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த அவர், மாடியில் ஏறி சுவற்றிற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டபாணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பொன் தண்டபாணிக்கு கல்யாணி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 968
Comments are closed, but trackbacks and pingbacks are open.