Rock Fort Times
Online News

குளியல் அறையில் பரிதாபம்: கழுத்தை துண்டு இறுக்கியதில் வழக்கறிஞரின் மகன் சாவு …!

திருச்சி வடக்கு தாராநல்லூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் சதீஷ். வழக்கறிஞர். இவரது மகன் கார்த்திக் (வயது 10). திருச்சி இ.பி.ரோடு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான் .நேற்று கார்த்திக் குளியலறைக்கு குளிக்க சென்றான். அப்போது குளியல் அறையில் உள்ள கம்பியில் துண்டால் விளையாட்டாக கழுத்தில் போட்டு தொங்கிப் பார்த்தான். அது எதிர்பாராத விதமாக கழுத்தை இறுக்கி விட்டது. குளிக்க சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் குளியலறையை திறந்து பார்த்தபோது கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குளியலறைக்குள் சென்று விளையாட்டாக நிகழ்த்திய சம்பவம் வினையில் முடிந்தது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்