சீனாவில் துயரம்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலி-40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சீனாவில் நான்ஜிங் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இன்று (24- 2- 2024) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், அந்தத் தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால், குடியிருப்பில் வசித்த மக்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் தப்பித்து வெளியே ஓடிவந்து உயிர் பிழைத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும், இந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திலிருந்து தீ பற்றியது தெரிய வந்துள்ளது. இது குறித்த தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நேரத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சீனாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.