Rock Fort Times
Online News

தஞ்சையில் ஒருதலை காதலால் விபரீதம்: அரசு பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை சரமாரி குத்திக் கொலை… ( வீடியோ இணைப்பு)

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன்( 30) என்பவர் ஆசிரியை ரமணியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை பெண் கேட்டு பெற்றோருடன் ரமணி வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் ரமணி, மதனை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த மதன் இன்று (20-11-2024) காலை ரமணி பணியாற்றும் அரசு பள்ளிக்குள் நுழைந்து அங்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணி கழுத்து பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், ரத்தம் பீறிட ரமணி மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்