Rock Fort Times
Online News

ஓசூரில் வக்கீலை வெட்டிக் கொல்ல முயற்சி- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…! ( பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்)

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரி தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் கண்ணன். ஒசூரில் பிரபல வழக்கறிஞர் சத்தியநாராயணாவிடம் இவர் ஜூனியராக வேலை பார்த்து வருகிறார். ஓசூர் நாமல் பேட்டையை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் வேறொரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில் 20-11-2024 நீதிமன்றத்திற்கு கேஸ் கட்டுகளுடன் வந்த கண்ணனை ஆனந்தகுமார் வழிமறித்து, தான் கொண்டு வந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார் . இதில் அவருக்கு தலை, கழுத்து, முதுகு என ஐந்து இடங்களில் வெட்டு விழுந்தது. இதில், அவர் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் சரிந்து விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சக வழக்கறிஞர்கள் அவரை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை முயற்சி தொடர்பாக ஆனந்த குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்