Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்…!

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பெல் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி. யுமான ப.குமார் கலந்துகொண்டு நிர்வாகிகள் மற்றும் பூத் பாக கிளை பொறுப்பாளர்களிடம்புதிய வரைவு வாக்காளர் பட்டியலை கொடுத்து ஆற்றவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன், கார்த்திக், நகர கழக செயலாளர் பாண்டியன், பகுதி கழகச் செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சின்னதுரை, சம்பத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்