திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்- அமைப்புச் செயலாளர் அரி, மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்பு…!
அதிமுக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அரியமங்கலத்தில் நடைபெற்றது. பகுதி செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் அரி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ராதேவி, ஒன்றிய செயலாளர்கள் ராவணன், கார்த்திக், நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், கோபால்ராஜ், பேரூர் கழகம் முத்துக்குமார் மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ராஜமணிகண்டன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் பாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கணேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட கலை பிரிவு செயலாளர் ராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.