திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 12 பவுன் நகை பறிக்கப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் மெயின் ரோடு வியாசராச வீதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி ( 73). இவர் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். ஜோதிடரான அவரது மகன் வெளியூர் சென்று விடுவார். பின்னர் அவரது தாயார் மட்டும் தனியாக வீட்டில் இருப்பார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலை சரஸ்வதி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் முகமூடி அணிந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டில் இருந்த சரஸ்வதியை மிரட்டி அவர் அணிந்திருந்த சுமார் 12 பவுன் மதிப்பிலான நகைகளை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் மூலதோப்பை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments are closed.