Rock Fort Times
Online News

திருச்சியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி ! பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசின் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு ஜூன் 10 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்று பலனடையலாம் என மாவட்ட ஆட்சியர் எம் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., அரசின் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில்,சிறந்தபயிற்சியாளர்களை கொண்டு முதல்நிலைத் தேர்வுக்கான அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 94990 55901, 94990 55902 என்ற திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்