தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விசிக தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பெருமளவிலான தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், அவருடைய கட்சியினரைச் சேர்ந்த சிலர் திடீரென பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்றதால், அங்கு குழப்பமான நிலை உருவானது. பலமுறை எச்சரிக்கப்பட்டபோதும், அவர்கள் தொடர்ந்து வாகனத்தில் ஏறி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமாவளவன், வாகனத்தில் ஏறி தொந்தரவு செய்த ஒரு தொண்டரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கட்சி நிர்வாகிகள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed.