திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம்–மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (23-01-2024) மின் வாரியத்தால் காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன . இதன் காரணமாக மண்டலம்-1 மேலூர், தேவிஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், திருவானைக்காவல், அம்மாமண்டபம், ABIEA நகர், மண்டலம்-2, சுந்தராஜ நகர், காஜாமலை புதியது, மண்டலம்-3 அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில்நகர், மகாலெட்சுமி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார்கோட்டை, செக்ஸன் ஆபிஸ், நாகம்மை வீதி, கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் , பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், மண்டலம்-4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், எல்.ஐ. சி காலனி , கே.சாத்தனூர், விஸ்வநாதபுரம், சுப்பிரமணிய நகர், தென்றல் நகர், இபி காலனி, வி.என்.நகர், சத்தியவாணி முத்து நகர், கே.கே.நகர், சுப்பிரமணிய நகர், ஆனந்த நகர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதி நகர், எடமலைப்பட்டிபுதூர் , காஜாமலை, கிராப்பட்டி, அன்புநகர், ரெங்காநகர், மண்டலம்-5 மங்கலம் நகர், சிவாநகர், உறையூர், பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 24.01.2024 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 25.01.2024 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்
Comments are closed, but trackbacks and pingbacks are open.