Rock Fort Times
Online News

திமுக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை…- திருச்சியில் துரை வைகோ எம்பி…!

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ எம்பி இன்று (14-04-2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா ,மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் துரை வைகோ எம்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு செயலாளர் போலவே செயல்பட்டு வருகிறார். ஒரு கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளை தீர்க்க அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் கூறுவதை கட்சி தலைமை கேட்க வேண்டும். அதே போல கட்சி தலைமைக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அது புற்றுநோய் போல் பரவி இயக்கத்தையே அழித்து விடும். நாங்கள் திமுக கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். கூட்டணிக்குள் எந்த வித குழப்பமும் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும். ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒட்டிய போஸ்டருக்கு அக்கட்சியின் தலைவரே கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்