5 பேர் உயிரிழந்ததற்கு வெயிலின் தாக்கம் தான் காரணம், யாராவது அரசியல் செய்ய நினைத்தால் “பெயிலியர்” ஆகி விடுவார்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது.இதில் , யாராவது அரசியல் செய்ய நினைத்தால் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்த யாரும் உயிரிழக்கவில்லை என அரசு கூறவில்லை. வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு விட்டன. யாரும் கூட்டம் நெரிசல் காரணமாகவோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றியோ உயிர் இழக்கவில்லை. வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது. 5 பேர் உயிர் இழந்ததற்கு வெயிலின் தாக்கம் தான் காரணம். வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். விமான சாகச நிகழ்ச்சியில் போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், குடிநீர் பாட்டில், குடை எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அரசு மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.5 பேர் உயிரிழப்பை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அவ்வாறு அரசியல் செய்ய நினைத்தால் அவர்கள் “பெயிலியர்” ஆகிவிடுவார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.