திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா இவர் மதுரையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா சென்னையில் இருந்து மதுரைக்கு ரெகுலராக லோடு ஏற்றி சென்று வந்துள்ளார்.இந்நிலையில் சென்னையில் இருந்து ஈச்சர் லாரியில் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். கடந்த 23ம் தேதி இரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இரவு 12 மணிக்கு மேல் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார். பின்னர் காலையில் லாரி எடுத்துக்கொண்டு திருச்சி சென்று கம்பெனியில் லாரி நிறுத்திவிட்டு மேனேஜரிடம் சொல்லிவிட்டு கிளம்பி உள்ளார். அப்போது மேனேஜர் லாரியை சோதனை செய்த போது லாரியில் இருந்த 49 அட்டைப்பெட்டியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து லாரி டிரைவர் சிவராஜாவிடம் கேட்டபோது லாரி எங்கேயும் நிறுத்தவில்லை. வழக்கமாக நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி விட்டு வந்தேன் என கூறியுள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.