Rock Fort Times
Online News

மத்திய அரசுக்கு நன்றியும் – கண்டனமும்! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 10 தேர்தலில் வெற்றியை தேடி தந்த திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். வாக்காளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.  திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முப்பெரும் விழா கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்கள், தெருமுனை கூட்டங்கள், கொடிக்கம்பங்கள் புதுப்பிக்க தீர்மானம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட முன்வந்த மத்திய அரசுக்கு நன்றி. அதேசமயம் நிதி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்