Rock Fort Times
Online News

திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு! வானத்தில் வட்டமடிக்கும் விமானம்!

திருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு இன்று மாலை 5.40 மணிக்கு 144 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை கண்டறிந்த விமானிகள் மீண்டும் விமானத்தை திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கேட்டனர். உடனடியாக அதற்கான அனுமதி கிடைத்த நிலையில், மீண்டும் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. ஆனால் விமான நிலையத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதன் காரணமாக விமானத்தை தரை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முயற்சியில் விமானிகள் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் பயணம் செய்யும் 141 பயணிகளின் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்