தமிழக பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தடா பெரியசாமி, “தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். பாஜகவில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். பாஜகவிலும் அங்கீகாரம் இல்லை; தலைமையும் கண்டு கொள்வது இல்லை,”இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறினாலும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.