திமுக அரசு நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்காததால் கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “கடந்த 10 மாதங்களாக திமுக அரசு முன்பு நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்கவில்லை. சமூகநீதிக்கு எதிரான சக்திகளை திமுக உடன் வைத்துள்ளது. திமுக எங்களைப் புறக்கணித்து விட்டது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அரசு அதிகாரிகளே திமுகவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகளின் ஆலோசனைபடி திமுகவும் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம். சட்டமன்ற தேர்தல் நிலைபாடு தொடர்பாக அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணியில் நிச்சயம் இடம்பெற மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.