தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி 3 நாட்கள் பயணமாக இன்று(04-02-2024) சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் ஆர்.என்.ரவி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் டெல்லியில் இருப்பார் என்றும், அதன்பிறகு சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.