Rock Fort Times
Online News

திடீர் உடல்நலக் குறைவு: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

அதிமுக அவை தலைவராக இருப்பவர் தமிழ் மகன் உசேன் (வயது 85). இவர் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த நிலையில் அவருக்கு ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் காய்ச்சல் மற்றும் குளிர் அதிகமாக இருந்த காரணத்தினால் திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேனை மாவட்ட செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், மு.பரஞ்சோதி, ப.குமார், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்து நலம் விசாரித்தனர். அவர் இன்னும் 2, 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்