திருச்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
மாநகராட்சி மேயர் அன்பழகன் எச்சரிக்கை..
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையிலும், ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையிலும் இன்று ( 30.05.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், த. துர்காதேவி, பு.ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். இதற்கு பதில் அளித்து மேயர் கூறியதாவது:-
சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நகர்நல நல்வாழ்வு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார். பூங்காக்களை பராமரிக்க, சீரமைக்க அந்தப் பகுதி மக்களுடன் சங்கம் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் 179 தார் சாலைகள், 246 கான்கிரீட் சாலைகள் என மொத்தம் 425 சாலைகள் 67 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.24.91 கோடியில் போடுவதற்கு நிர்வாக அனுமதி வழங்குவது உள்ளிட்ட 74 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.