முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் 21 மற்றும் 21 ஏ வட்ட தி.மு.க. சார்பில் 21 வது வட்டச் செயலாளர் முஹம்மது முபாரக், 21ஏ வட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் , தலைமைக் கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாநகர செயலாளர் மதிவாணன் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் நாடும் நமதே, நாற்பதும் நமதே என்ற கோட்பாட்டின்படி முதல்வர் கூறும் வேட்பாளரை ஒன்றிணைந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். முன்னதாக, மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன் வரவேற்றார். மாமன்ற உறுப்பினர் மும்தாஜ்பேகம் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட ,மாநகர நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, நூர்கான், மணிமேகலை, சிந்துஜா, இன்பா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.