திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஏவூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு, லால்குடி பரமசிவபுரத்தை சேர்ந்த விஜயா என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பணி முடிந்து மாலை 6 மணி அளவில் சுகாதார நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் துணை சுகாதார நிலையத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக ஊராட்சி மன்றத் தலைவர் சிவஞானத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விஜயா ஆகியோர் துணை சுகாதார நிலையத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சிலிண்டர் திருட்டுப் போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் விஜயா புகார் செய்தார். புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் துணை சுகாதார நிலையத்தில் சிலிண்டர் திருடியது ஏவூர் மேல தெருவை சேர்ந்த ராமதாஸ் (35)மற்றும் அதே தெருவை சேர்ந்த பிரசாந்த் (24)என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட சிலிண்டர் மீட்கப்பட்டது.
Comments are closed.