Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 2-ம் தேதி மூலஸ்தான சேவை கிடையாது கோவில் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி( 2- 7 -2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும், மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மறுநாள் ஆனி மாதம் 16ம் தேதி (3/7/2023) திங்கட்கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என்று பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்