Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்றவர்களை கைது செய்த தனிப்படை போலீசார்…- “பணி பாராட்டு சான்றிதழ்” வழங்கிய திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம்…!

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை, கட்டப்பஞ்சாயத்து, லாட்டரி விற்பனை, திருட்டுத்தனமாக மது விற்பனை, போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் உத்தரவிட்டதோடு குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு “பணி பாராட்டு சான்றிதழ்” வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவாத் தலைமையிலான தனிப்படையினர் பெல் கைலாசபுரம் நகரிய குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஸ்ரீதரன் மகன் நரேஷ் ராஜு (26) என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 2.6 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, 13-ம் தேதி காலை என்ஐடி அருகே துவாக்குடி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருச்சி இரட்டைவாய்க்கால் வாசன் நகரைச் சேர்ந்த சதிஷ்குமார் (29), தென்னூரை சேர்ந்த சி.முகமது இசாக் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் நேரில் அழைத்து பாராட்டியதோடு “பணி பாராட்டு சான்றிதழ்” மற்றும் வெகுமதி வழங்கினார். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து, திருச்சி மாவட்ட எஸ்.பி.யின் உதவி எண் 89391 46100 (வாட்ஸ்அப்), மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0431-2333621 ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம். சரியான தகவல் அளிப்போருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ‘பாராட்டு சான்றிதழ்” வழங்குவார் என மாவட்ட எஸ்.பி. அலுவலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்