கோடை விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிப்பு:- “ஸ்லீப்பர்” வகை தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்.இ.டி.சி முடிவு…!
தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்க திட்டமிட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், தனியாரிடம் இருந்து 20 ஏசி அல்லாத ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.இ.டி.சி.-ன் கீழ் தற்போது 1,080 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக எஸ்.இ.டி.சி.மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது ஏசி அல்லாத சொகுசு பேருந்துகளுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் போதிய எண்ணிக்கையில் நான் -ஏசி பேருந்துகள் இல்லை. எனவே தான் தனியாரிடம் 20 ஏசி அல்லாத சொகுசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநரையும் சேர்த்து தான் வாடகைக்கு எடுக்கிறோம். ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு தொகை என்று ஒப்பந்தம் போடப்படும்” என்றார்.
Comments are closed.