தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தாலோ, லஞ்சம் கேட்டாலோ பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக பிரத்தியேக இமெயில் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான எஸ். ரமேஷ் இன்று( ஜூலை 3) அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், கோவில்களின் திருப்பணிகள் மற்றும் கோவில்களின் வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி minister@_hrce@tn.gov.in என்கிற எனது தனிப்பட்ட ஈமெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.