Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு பெற நாளை ( செப்.21 ) சிறப்பு முகாம்! பொதுமக்கள் பயன்பெற ஆணையர் அழைப்பு!

திருச்சி மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை  வசதி வழங்கும் பணிகள் ரூ. 377.29 கோடியில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது. மேலும், புதிய பாதாள சாக்கடை  கழிவுநீர் கட்டணங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மாநகராட்சிக்குட்பட்ட 36, 37, 38, 39, 40, 42, 43, 44 ஆகிய வார்டுகளில் புதிதாக பாதாள சாக்கடை  இணைப்புக்கான விண்ணப்பம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை சனிக்கிழமை (செப்.21) காலை 10 மணியளவில் காட்டூர்,மாண்ட்போர்ட் பள்ளி அருகேயுள்ள சிங்காரம் மஹாலில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், இணைப்பு பெறாத வார்டுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும்போது நடப்பு ஆண்டு வரை செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது நகல் மற்றும் சாக்கடை இணைப்பிற்கான வைப்பு நிதி ரசீது நகல் ஆகியவற்றை இணைத்து, உரிய வைப்புத் தொகை செலுத்தி ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்