சொந்த ஊர் சென்று வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
இந்திய பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கவும், வாக்களித்த பின்னர் பணியாற்றும் பகுதிகளுக்குச் செல்லவும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் ஏப்ரல் 17, 18 மற்றும் 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய மாநிலத்தின் அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை, திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு சேவையும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருச்சி மண்டலம் தெரிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.