திருச்சி மத்திய மண்டலத்தில் தொட்டு உணரக்கூடிய தரையை நிறுவியதற்கான முதல் தபால்நிலையம் என்ற பெருமையை திருச்சி தலைமை தபால்நிலையம் பெற்றுள்ளது. இங்கு தபால் சேவைகளை அனைவரும் பெறும் வகையில், குறிப்பாக மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்கள் எளிதாக மேலே ஏறக்கூடிய வகையில் சாய்வு தளம் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தபால் நிலையங்களில் பிரெய்லி சைனேஜ் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. திருச்சி தலைமை தபால் நிலையத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்கள், தொட்டு உணரக்கூடிய வகையில் தளமும் அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் பல தபால்நிலையங்களில் இதுபோன்று நடைமுறைபடுத்தப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.