திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள விசுவாம்பாள் சமுத்திரம் கிராமம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி( வயது 55) கூலி தொழிலாளி. இவரது மகன் சுரேந்தர் (25). மதுப்பழக்கம் உடைய புகழேந்தி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த தந்தையை சுரேந்தர் கண்டித்துள்ளார். இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் தந்தை என்றும் பாராமல் அவரை அம்மிக்கல்லால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தார். இந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த புகழேந்தியின் மனைவி வீடு திரும்பினார் . அப்போது கணவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில், பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புகழேந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர். தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.