திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மணல் கிடங்கு, லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மணல் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று( 13.06.2023 ) மணல் அள்ளும் நேரத்தை காலை 10 மணி என மாற்றி வைத்ததால் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.