தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு பணிபுரிந்து வருகிறார். இவர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வந்த ஷிவ்தாஸ் மீனா தற்போது தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஷிவ்தாஸ் மீனா நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வந்தார். 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர் முதன் முதலில் காஞ்சிபுரம் உதவி கலெக்டராக பணியை தொடங்கியவர். இவர் தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளர் ஆவார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.