Rock Fort Times
Online News

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்…

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தநிலையில் மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையில் இன்று ( 13.06.2023 ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில், தமிழக தலைமைத் தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரியாகுமார், திருமலைமுத்து, எம்.செல்வராஜ் ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்