Rock Fort Times
Online News

திருச்சியில் 2 பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு- வேன் டிரைவர் மீது போலீசில் புகார்…!

திருச்சி, துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் உள்ள  பள்ளிகளில் அப்பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தம்பி இருவரும் படித்து வருகின்றனர். அண்ணன் ஏழாம் வகுப்பும், தம்பி நான்காம் வகுப்பும் பயின்று வருகின்றனர். அவர்கள் இருவரையும் ராஜேஷ் கண்ணா( 53) என்பவர் வேன் மூலம் காலையில் பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் மாலையில் அழைத்து வருவது வழக்கமாம். இந்நிலையில் நேற்று (06.11.2024) மாலை ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவரை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டுவிட்டு திரும்ப மாத்தூரில் டியூஷனுக்கு அழைத்துச் செல்ல ஏற்றிக்கொண்டு வந்தவர், குண்டூர் நூறு அடி சாலை ஐயன்புத்தூர் கிராமம் அருகில் உள்ள ஒரு இடத்தில் வேனை நிறுத்திவிட்டு மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் அந்த மாணவர் தெரிவித்தார். மேலும், அந்த மாணவனின் தம்பியையும் வேன் டிரைவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வேன் டிரைவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ராஜேஷ் கண்ணா மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்