நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதி கடந்த 2016-17 ஆண்டுகளில் திருச்சி மாவட்ட வனத்துறையில் பணியாற்றினர். அப்போது திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலராகப் பணியாற்றிய சதீஷ், பெண் வனக்காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அவரது கணவரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து அப்போது அளிக்கப்பட்ட புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக அண்மையில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டு, அந்த மனு டிஜிபி அலுவலகம் வாயிலாக திருச்சி மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் புகார் மனு மீது கண்டோன்மென்ட் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சதீஷ், தற்போது தமிழக வனத்துறையில் திருச்சி மண்டல முதன்மை வனக்காப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.