90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தொடரான `கனா காணும் காலங்கள்’ மூலம் மக்களிடையே பரிச்சயமான காமெடி நடிகர் அன்பழகன் என்கிற அன்பு. இவர் பேசிய `Yes Sir… No Sir… Sorry Sir’ என்கிற வசனம் ரசிகர்களிடையே பிரபலம். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சீதா ராமன்’. இந்தத் தொடரில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ‘சீதாராமன்’ தொடரைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘அண்ணா’ தொடரிலும் நடித்துக் கொண்டிருந்தார். தனது எதார்த்தமான நகைச்சுவை உணர்வினால் அனைவரையும் சிரிக்க வைத்தவர். இவர், மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தார் அன்பு. ராணிப்பேட்டை மாவட்டம் பழைய கண்டிகையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. அன்புவிற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அன்புவின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.