Rock Fort Times
Online News

ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு…

ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஐபிஎஸ் அதிகாரிகள் பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கு டி.ஐ. ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனந்த்குமார் சோமனி, ஆர்.தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐஜி யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்