Rock Fort Times
Online News

ஓபிஎஸ், டிடிவி தினகரன் சேப்டர் “குளோஸ்” – திருச்சி அதிமுக கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு…!

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ப..குமார் தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் தங்கமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:- கூட்டத்தின் நோக்கம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக கொண்டு வர வேண்டும் என்பதுதான். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கட்சியில் இவ்வளவு சிக்கல் கிடையாது. ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக கரைந்து விடும் என திமுகவினர் கருதினர். அதனை, எடப்பாடி தவிடு பொடியாக்கி அதிமுகவை கட்டிக் காத்து வருகிறார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார். செந்தில் பாலாஜி என்ற நிபுணரை புதிதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்மூலம் டாஸ்மாக் சரக்குகளின் விலையை டிசைன் டிசைனாக ஏற்றுகிறார்கள்.

கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு பணம், பொருள் கொடுத்து கொடை வள்ளலாக திகழ்ந்தவர் எடப்பாடி. ஓ.பி.எஸ்., டி.டி.வி.தேர்தலில் தோல்வி அடைந்து விட்டனர். அவர்கள் இருவரின் சேப்டர் குளோஸ் ஆகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார். அமைப்புச் செயலாளர் தங்கமணி பேசுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் களப்பணியாற்ற வேண்டும். அதற்கு, கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தல், புதிய கார்டுகளை விடுதலின்றி வழங்குதல், பூத் வாரியாக கிளைகள் அமைத்தல், பூத் கமிட்டி முகவர்களில் சரியான நபர்களை நியமித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்தி திருச்சியை மீண்டும் அதிமுக கோட்டையாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், எஸ்.வளர்மதி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்