Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்தநிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இன்று(20-11-2024) தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழக காவல்துறையும், சிபிசிஐடியும் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்