Rock Fort Times
Online News

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி….

பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் கார்த்தி (வயது 40) என்பவர் நடத்தி வந்தார். இதில் அவரது கூட்டாளிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் பணியாற்றி வந்தனர். தங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.15,000 வீதம் 18 மாதங்கள் வழங்கப்படும் என கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகவும் கூறியுள்ளனர். பலர் கமிஷன் அடிப்படையிலும் அந்த நிறுவனத்திற்கு முதலீட்டை பெற்று கொடுத்த நிலையில், கூறியபடி சில மாதங்கள் பணம் வழங்கிய அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ரூபாய் 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்ததாகவும், அந்த வகையில் கோடிக்கணக்கான ரூபாய் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் இதில் முதலீடு செய்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா (60) என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் இந்த நிதி நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து உள்ளேன். அதேபோல எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 791 நபர்களிடமிருந்து ஒரு லட்சம் முதல் 15 லட்சம் வரை பெற்று மொத்தம் ரூ.6 கோடியே 37 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அந்தப் பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் மோசடி நடந்த சம்பவம் திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்