பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்த மாதம் 8-ம் தேதி இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி வந்திருந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் பகுதியில் நின்று கொண்டு இருந்த காவியா என்ற சிறுமி ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வையுங்கள் என்று சத்தமாக கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட முதல்வர், சிறுமியின் கோரிக்கை என்னவென்று கேட்டு நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவின்பேரில் இன்று ( 21.06.2023 ) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமி காவியாவின் படிப்பு செலவுக்காக அவரது தாயிடம் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். மேலும் கோவை மாவட்டத்தில் இவர்கள் தங்குவதற்கு வீடும், அரசு வேலையும் கொடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்ட து.

Comments are closed, but trackbacks and pingbacks are open.