திருச்சி மாவட்டம், லால்குடி தச்சங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மகன் சக்திவேல் (வயது 23). இவர் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் .அந்த புகாரில், தமது நிதிநிறுவனத்தில் இரண்டு பேர் தங்க முலாம் பூசப்பட்ட இரண்டு கவரிங் வளையல்களை வைத்து பணம் பெற்று சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணிய புரத்தை சேர்ந்த முகமது கபீஸ், பெரிய மிளகுபாறையை சேர்ந்த ஆஷிக் முகமது ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.