திருச்சி மாநகராட்சிக்கு 2023-2024 ம் ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனைவரி, புதைவடிகால் சேவை கட்டணம், தொழில்வரி மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மாநகராட்சி வார்டுகுழு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வரிவசூல் மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரி வசூல் மையங்களில் பொதுமக்களின் வசதிக்காகவும், கோடைகால மாதங்களில் நிலவும் தட்பவெட்ப நிலையை கருத்தில் கொண்டும் பணி நேரத்தினை காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி காலை மற்றும் மாலை நேரங்களிலும், தங்களுக்கான வரியினை நிலுவையின்றி செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.